பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை…

27 August 2020, 7:09 pm
Quick Share

தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே மலை கிராமத்தில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரூபாய் 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி ஊராட்சி வாரக்கொல்லை மலை கிராமத்தை சேர்ந்த விவசாயி பூஞ்சோலை. இவரது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள நிலத்தில் இவரும் இவரது மனைவி பாஞ்சாலியும் விவசாய வேலையில் இருந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாமல் இறந்த வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நெக்லஸ், கம்மல் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகள் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பூஞ்சோலை பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

Views: - 9

0

0