ஆடி அமாவசையையொட்டி 108 கிலோ மிளாகாய் கரைசலில் குளித்த பூசாரி…

Author: kavin kumar
8 August 2021, 8:58 pm
Quick Share

தருமபுரி: இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தில் ஆடி அமாவசையையொட்டி 108 கிலோ மிளாகாய் கரைசலை பூசாரி மீது ஊற்றி பொதுமக்கள் அபிஷேகம் செய்தனர்.

தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள பெரியகருப்புசாமி கோயிலில், இன்று ஆடி அமாவாசையொட்டி கருப்பு சாமிக்கு மிளகாய் அபிஷேகம், பால் அபிஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இக்கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் கருப்பு சாமிக்கு மதுபானங்களையும்,சுருட்டுகளையும் வைத்து படையிலிட்டனர். இதனையடுத்து கோயில் பூசாரி கோவிந்தன் அருள் வந்து ஆடியபடி கத்திமேல் ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். இதனையடுத்து 108 கிலோ மிளகாய் கரைசலை கோயில் பூசாரி கோவிந்தன் மீது ஊற்றி அபிஷேகம் செய்தனர். பிறகு தீய சக்திகள் விலகவும், குடும்பிரச்சனைகள் மற்றும் வியபார பிரச்சனைகள் அகலவும், மிளகாய் யாகம் நடைபெற்றது. மேலும் அக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆடு,கோழிகளை பலியிட்டு வழிப்பட்டனர்.

Views: - 191

0

0