பெண்களின் கழுத்தில் செயின் திருட முயற்சி செய்த இரு பெண்கள் கைது

4 February 2021, 5:23 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் பெண்களின் கழுத்தில் செயின் திருட முயற்சி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இருபெண்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாகல ஹள்ளி கிராமத்தில் இன்று விநாயகர் ராமச்சந்திர மூர்த்தி சாய் பாபா ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தில் காலை பத்து மணியிலிருந்து பத்தரை மணிக்குள்ளாக கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கருவறையிலுள்ள ராமச்சந்திர மூர்த்திக்கு புனிதநீர் அபிஷேகம் பணி நடைபெற்றபோது, திரளான பக்தர்கள் குவிந்து முண்டியடித்து சாமி தரிசனம் செய்த போது, பின்னாலிருந்த சந்தேகப்படக் கூடிய இரு பெண்களை கூட்டத்தில் இருந்த சாமி தரிசனம் செய்து வந்த பெண்களிடம் கழுத்தில் கைவைத்து செயினை பறிக்க முயன்ற போது,

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கையும் களவுமாக இரு பெண்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இரு பெண்களை காவல்துறையினர் விசாரணை செய்தபோது, முன்னுக்கு முரணாக பதில் கூறியதால், இருவரையும் விசாரணைக்காக தொப்பூர் காவல் ஆய்வாளர் காவல்நிலையத்திற்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் திருவிழாக்களில் பெண்கள் கழுத்தில் இருந்த தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறிப்பாக கடந்த வாரம் இண்டூர் பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவில் 3 பெண்களிடம் 14 பவுன் நகை திருடப்பட்டது. அதனை இண்டூர் காவல்துறையினர் இதுவரை திருடிய குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யாத நிலையில் இன்று நல்லம்பள்ளி அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் நகையை பறிக்க முயன்ற இரு பெண்களை பொதுமக்களே கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0