பத்திரபதிவுதுறை அலுவலகத்தில் பெண் மீது தாக்குதல்:நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார்

14 July 2021, 7:38 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி பத்திர பதிவுதுறை அலுவலகத்தில் பெண்ணை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த பச்சனம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி, ராஜம்மாள் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இரு மகன்களுக்கும் திருணம் நடந்து. மூத்த மகனுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உள்ளனர். மற்றொரு மகனுக்கு ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்களுக்கு முன்பு மூத்த மகனும், இரண்டாவது மகன் மற்றும் அவரது மனைவியும் இறந்துவிட்ட நிலையில், சுப்பிரமணி அவரது மனைவி மற்றும் மூத்த மருகள் சங்கீதா, பேரன் பேத்திகளுடன் அவர்களது விவசாய நிலத்தில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மேலும் சுப்பிரமணியின் மனைவி பெயரில் 6 அரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் மூத்த மருமகள் சங்கீதாவிற்கு 3 ஏக்கர் விவசாயம் செய்ய ஒதுக்கி உள்ளனர்.

அந்த விவசாய நிலத்தில் சங்கீதா விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுப்பிரமணி தனது மருகளுக்கு தெரியாமல் சோமனஅள்ளி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு 3கோடியே 50 இலட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதில் முன்பணமாக 2 கோடி ரூபாயை வாங்கிகொண்டு தருமபுரி பத்திர பதிவு அலுவலகத்தில் முருகேசன் பெயருக்கு 6 அரை ஏக்கர் நிலத்தையும் பதிவு செய்ய முயன்ற போது . மூத்த மருகள் சங்கீதா மற்றும் இரண்டாவது மகனின் மகள் ஆகியோர் பத்திர பதிவாளரிடம் தங்களுக்கு தெரியாமல் எனது மாமனார் மாமியார் ஆகியோர் நிலத்தை விற்பதாகவும் நிலத்தை வேறுயாருக்கும் பதிவு செய்ய வேண்டாம் என கண்ணீர்விட்டு கதறி அழுதுள்ளார்.

பின்னர் பதிவாளர் பிரச்சனையை தீர்த்துவிட்டு வாங்க என பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டார். இந்த நிலையில் இன்று சங்கீதாவிற்கு தெரியாமல் அவரது மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் அடியாட்கள் உதவியுடன் பத்திர பதிவு அலுவலகத்தில் மீண்டும் நிலத்தை பதிவு செய்ய முயன்றனர். இதனை அறிந்த சங்கீதா பதிவு செய்வதை தடுக்க முயன்ற போது சுப்பிரமணி அழைத்து வந்த அடியாட்கள் பத்திரபதிவு துறை அலுவலகத்தில் சங்கீதா மற்றும் சுப்பிரமணியின் இரண்டாவது மகனின் மகளையும் அடியாட்களை கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் இரண்டாவது மகனின் மகள் படுகாயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சங்கீதா கூறுகையில், தனக்கு ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண்மகனும் உள்ளனர். அதே போல் தனது கணவரின் தம்பிக்கு ஒரு பெண் பிள்ளை மட்டும் உள்ளார். அந்த பிள்ளை தந்தை மற்றும் தாய் இறந்துவிட்ட நிலையில், எங்கள் யாருக்கும் சொத்தில் பங்கு கொடுக்காமல், எங்களுக்கு தெரியாமல் மாமனார் மற்றும் மாமியார் எங்களுக்கு சொந்தமான 6 அரை ஏக்கர் நிலத்தை விற்க்க முயன்றதை தடுக்கும் போது, அடியாட்களை வைத்து தங்களை கடுமையாக தாக்கினார்கள்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே போல் பத்திர பதிவுதுறை பதிவாளரிடம் கண்ணீர் விட்டு கதறியும்,சொத்தில் பங்கு கொடுக்காமல் விற்பனை செய்வதாகவும்,சொத்தில் வில்லங்கம் இருப்பதாக கூறியும், காவல்துறையினரிடம் தெரிவித்தும் அவர்கள் யாரும் கண்டுகொள்ளால், அவர்களுக்கு சாதகமாக இருந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Views: - 117

0

0