லாரி டயர் திருடி சென்ற திருடர்கள் கண்டுபிடித்து தருமாறு பட்டறை தொழிலாளர்கள் கோரிக்கை

16 November 2020, 9:17 pm
Quick Share

தருமபுரி: பழைய தருமபுரியில் லாரி டயர் திருடி சென்ற திருடர்கள் கண்டுபிடித்து தருமாறு பட்டறை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி அடுத்த பழைய தர்மபுரி பகுதியில் 5க்கும் மேற்பட்ட லாரி பாடி பில்டிங் பட்டறைகள் இயங்கி வருகிறது. இப்பகுதியில் தருமபுரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு லாரி உரிமையாளர்கள் லாரி பாடி கட்டுவதற்காக இங்கே விட்டு செல்வார்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் செல்வம் பாடி பில்டிங் பட்டறையில் தன் லாரிக்கு பாடி கட்டுவதற்காக விட்டுச் சென்றார். நேற்று முன்தினம் தீபாவளி என்பதால் பட்டறையில் இரவு காப்பாளர் உட்பட யாரும் தங்கவில்லை.

இதனை அறிந்த திருடர்கள் செல்வம் லாரி பட்டறையில் உள்ள இரண்டு லாரிகளில் 6 புதிய டயர்களை திருடிச் சென்றுள்ளனர். அதையடுத்து பட்டறை உரிமையாளர் செல்வம் தன் பட்டறைக்கு வந்து பார்த்த போது லாரி டயர்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் திருடி சென்றவனை பிடித்து கைது செய்வதாக உறுதியளித்துள்ளார். இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டறைகளில் டயர்கள் திருடு போவதாக பட்டறை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Views: - 18

0

0