முகக்கவசம் அணியாதவர்களுக்கு துணை வட்டாட்சியர் அபராதம்

7 September 2020, 10:29 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் பகுதியில் முகக் கவசம் அணியாத கடை வியாபாரிகள் மற்றும் வாகன ஒட்டிகளுக்கு துணை வட்டாட்சியர் அபராதம் விதித்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய நிலை உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் முகக்கவசம் இல்லாமல் வாகனங்கள் ஒட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் இருக்கும் கடைகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு மற்றும் கடை உரிமையாளர்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து மாஸ்க் இல்லாமல் இருக்கும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முக கவசம் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு நூறு ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும் அரசு பேருந்தில் பயணிக்கும் அனைத்து பயனர்களுக்கும் வருவாய்த்துறை சார்பாகவும் காவல்துறை சார்பாகவும் முக கவசம் அணியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இனிமேல் முக கவசம் இல்லாமல் வெளியே வந்தால் அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல் வாகனங்களையும் காவல்நிலையத்திற்கு அனுப்ப நேரிடும் என்றும் வருவாய்த் துறையினரும் மற்றும் காவல் துறையினரும் எச்சரிக்கை விடுத்தனர். இதில் துணை வட்டாட்சியர் குமரன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரும் மற்றும் அரசு அலுவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 0

0

0