நகைக்காக மூதாட்டியின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை

22 October 2020, 11:47 pm
Quick Share

தருமபுரி: பிடமனேரி பகுதியில் பட்டம்பகலில் 5 பவுன் நகைக்காக மூதாட்டியின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி பிடமனேரி சென்னகேசவன் தெருவை சேர்ந்தவர் முத்தம்மாள் 70 வயதான மூதாட்டி தனது மூத்த மகன் மாணிக்கவாசகம் வீட்டில் வசித்து வருகிறார். இவர் வழக்கமாக வீட்டின் திண்ணையில் அமர்வது வழக்கம். அதே போல் இன்றும் வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்துள்ளார். இந்நிலையில் முத்தம்மாளின் வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வரும் நகை வேலை செய்யும் தொழிலாளி சோமசுந்திரம் வெளியே சென்றிருந்த முத்தம்மாளின் மகனுக்கு செல்போனில் அழைத்து அம்மா மயங்கிய நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் படுத்துள்ளதாக கூறுகிறார்.

இதனையடுத்து இவரது மகன் மாணிக்கவாசகம் பதறியபடி வீட்டின் திண்ணையில் வந்து பார்த்த போது முத்தம்மாள் இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்சியடைகிறார். பின்னர் மூதாட்டி கழுத்து மற்றும் உடலில் அணிந்திருந்த 5 பவுன் நகை காணாததை கண்டு சந்தேகமடைந்த அவர் தருமபுரி நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கிறார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூதாட்டின் கழுத்தில் சிறிய காயம் ஏற்பட்டிருந்ததை வைத்து கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது என்கிற சந்தேகத்தில் வீட்டின் அருகே குடியிருந்தவர்களிடம் விசாரணை செய்தனர். இதில் சோமசுந்திரத்திடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரனாக பேசி உள்ளார்.

காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை செய்ததில் மூதாட்டியை நகைக்காக வீட்டிற்குள் அழைத்து சென்று இவரும் அவரது நண்பர் குமார் என்வரும் மூதாட்டியின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சோமசுந்திரத்தை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று இது போன்று நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டிருக்கலாமோ என தொடர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 16

0

0