பெற்ற பிள்ளைகால் கைவிட்டபட்ட 80 வயது மூதாட்டி: பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

11 September 2020, 7:45 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில், பெற்ற பிள்ளைகால் கைவிட்டபட்ட 80 வயது மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.

தருமபுரி நகரபகுதிகளில் 80 வயது மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் உணவு இல்லாமல் நோய்வாய்பட்டு நீண்டநாட்களாக தெருக்களில் சுற்றி வருவதாக தர்மபுரி நகர காவல்நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல்அளித்த நிலையில் நகர காவல்ஆய்வாளர் ரத்தினகுமார் காவர்துறையினருடன் சென்று தர்மபுரி பேருந்துநிலையம் அருகே நடக்க கூட முடியாமல் பசியுடன் சோர்வாக படுத்திருந்த மூதாட்டியிடம் விசாரித்ததில் அவரால் முழுமையாக பேச முடியவில்லை. உடனடியாக அந்த மூதாட்டியை சோகத்தூர் அருகே உள்ள ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்து உடனடியாக முதலுதவி செய்யுமாறு உதவி காவல்ஆய்வளாருடன் முதாட்டியை ஆட்டோவில் அனுப்பிவைத்தார்.

அங்கு சென்றதும் பாதுகாப்பு இல்லத்தில் உள்ளவர்கள் இவரை பார்த்து உடனடியாக குடிக்க தண்ணீர் வழங்கியும் உணவும் அளித்தனர்.அப்பொழுது இந்த பெண்மணி பெயர் லஷ்மி இவர் தர்மபுரி வெளிபேட்டை தெருவை சேர்ந்தவர் என்றும் இவரது கணவர் இறந்து 20 ஆண்டுகள் ஆகிறது .இவருக்கு 2 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். ஏற்கனவே சொத்து பிரச்சனையில் பிள்ளைகளால் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் கொரானா ஊரடங்கு காலத்தில் தர்மபுரி வட்டாட்சியராக இருந்த சுகுமார் உதவியுடன் இதே பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையும் அளித்து பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் பிள்ளகைளின் கவுர பிரச்சனை காரணமாக மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மீண்டும் இந்த மூதாட்டி பிள்ளைகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார் .

மேலும் இவரிடம் உள்ள சொத்துக்களை அபகரிக்க இவரை அழைத்து சென்று பின்னர் விரட்டியடிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் மூதாட்டியை கைவிட்ட அவரது பிள்ளைகளை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்ய உள்ளனர். வயது மூப்பு காரணமாக ரத்த அழுத்த பிரச்சனையும் நடக்கு முடியாத நிலையில் பெற்ற 5 பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்க காரணமானமுதாட்டியின் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Views: - 0

0

0