பெண் எரிந்த நிலையில் வீட்டு கழிவறையில் சடலமாக மீட்பு

15 January 2021, 8:57 pm
Quick Share

தருமபுரி: பாலக்கோடு அருகே பெண் எரிந்த நிலையில் வீட்டு கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதி அள்ளி கிராமத்தை சேர்ந்த இரட்டை இலை என்பவரின் மனைவி பைரவி இவருடைய கணவன் கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு குமரன் மற்றும் லோகேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் முனுசாமி என்பவருக்கும் சில வருடங்களாகவே வழிபாதை சம்மந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் இன்று பைரவி தற்கொலை செய்து கொண்டதாக பாலக்கோடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெண்ணின் சடலம் ஆசிட் ஊற்றி இடுப்பு பகுதிக்கு மேல் முற்றிலுமாக எலும்புகள் உருக்குலையும் படி அழிக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். மேலும் இது குறித்து காவல் துறையினர், வட்டாட்சியர், தடவியல் நிபுனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரனையை மேற்கொண்டனர். இந்நிலையில் ஊர் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் காவல் துறையினறை முற்றுகையிட்டு வழக்கறிஞர் முனுசாமி தான் பைரவியை ஆசிட் ஊற்றி எரித்து கொன்றுள்ளார்.

எனவே முனுசாமியை கைது செய்யும் வரை சடலத்தை ஆம்புலன்சில் ஏற்ற அனுமதிக்கமாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக துணை காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்ததின் பேரில் அதனை ஏற்று பொதுமக்கள் முற்றுகை போராட்த்தை கைவிட்டனர். அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடலை தர்மபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பெண்ணின் மரணம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் முனிசாமி விசாரித்து வருகின்றனர். இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0