ஆரம்ப சுகாதார நிலையங்களில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

15 May 2021, 9:32 pm
Quick Share

தருமபுரி: தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்க்கு ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் மாவட்ட நிர்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கபட்டு வருகின்றனர். அதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தை திறந்து வைக்கபட்டது. அதனையடுத்து இன்று தருமபுரி அடுத்த தொப்பூர் மற்றும் லளிகம் ஆகிய 2 ஆரம்ப சுகாதார நிலையங்களை தருமபுரி பாமக சட்டன்ற உறப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் தொப்பூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் 30 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா வார்டில் ஆக்சிஜன் குழாய் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆக்சிஜன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். உடனடியாக ஆக்சிஜன் வசதி செயது கொடுத்தால் 30 கொரானா நோயாளிகளுக்கு சிசிச்சை அளிக்க முடியும் எனவும், மேலும் பொதுமக்கள் அனைவரும் கொரானா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும், அதேபோல காய்ச்சல் மற்றும் கொரானா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிசிச்சை மேற்க்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Views: - 55

0

0