கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 960 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்
27 September 2020, 7:38 pmதருமபுரி: பாலக்கோடு அருகே கர்நாடக மாநிலத்திலிருந்து பாப்பாரப்பட்டிக்கு கடத்தி வரப்பட்ட 7 இலட்சம் மதிப்பிலான 960 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தல் தொடர்பாக இருவரை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கால்துறையினர்க்கு கர்நாடக மாநிலத்திலிருந்து தருமபுரிக்கு போலி மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்ததையடுத்து இன்று மதியம் பாலக்கோடு அடுத்துள்ள வெள்ளிசந்தை அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் வாகன சோதனையில் மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று வந்தது. அதனை நிறுத்திய போது கார் நிர்காமல் வேகமாக சென்றது.
இதனையடுத்து சோதனையில் இருந்த காவலர்கள் துரத்தி காரை மடக்கி பிடித்து நிறுத்தி பார்த்த போது கார் முழுவது 20 மூட்டைகளில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து காரை ஓட்டி வந்த சீராஜ்தில்கானிடம் விசாரணை செய்ததில் கர்நாடக மாநிலத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபாட்டில்கள் போல் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி மதுபாட்டில்களை கடத்தி வந்து தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த மணி என்பவருக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு வந்ததாக கூறியதையடுத்து போலி மதுபாட்டில்களை கடத்தி வந்த ஆனைக்கல் பகுதியை சேர்ந்த சிராஜ்தில்கான் மற்றும் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி விற்பனை செய்ய இருந்த மணி இருவரையும் கைது 7 இலட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.