பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு தருமபுரியில் வீரவணக்கம்

Author: Udhayakumar Raman
21 October 2021, 1:54 pm
Quick Share

தருமபுரி: பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு தருமபுரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வீரவணக்கம் செலுத்தபட்டது.

கடந்த 1959 ம் ஆண்டு இந்திய சீன போரின்போது உயிர் நீத்த மத்திய பாதுகாப்பு படை வீர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி தமிழக காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதனடிப்படையில் இன்று தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கான வீரவணக்க நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் பணியின் போது உயிர் நீத்த ராணுவ மற்றும் காவல் துறை வீரர்கள் 377 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நுனைவு தூணில் மலர்வலயம் வைத்து மரியாதை செலுத்தினர்.அதனையடுத்து காவலர்கள் 72 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அனைவரும் மைவுன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Views: - 149

0

0