ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவி உயிரிழப்பு: இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியல்
28 January 2021, 6:07 pmதருமபுரி: சின்னம்பள்ளி அருகே நாகாவதி ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், சின்னம்பள்ளி அருகே உள்ள பத்ரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமன் இவருக்கு 2 ஆண் மகன்களும் முத்துலட்சுமி என்கிற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பபு படித்து வருகின்றார். நேற்று மாணவி முத்துலட்சுமி மற்றும் அவரது தோழிகளும் அருகே உள்ள நாகாவதி அணையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நாகாவதி அணையிலிருந்து கால்வாய் அமைக்கும் பணிக்காக ஆற்றிலிருந்து ஆழமாக மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தேங்கி நின்றுள்ள பள்ளத்தில் மாணவிகள் குளித்துள்ளனர்.
இதில் ஆழமான பகுதிக்கு தெரியாமல் சென்றதால் நீரில் மூழ்கி சிறுமி முத்துலட்சுமி உயிரிழந்துள்ளார். முத்துலட்சுமி இறந்ததற்கு காரணம் நாகாவதி ஆற்றில் கால்வாய் அமைக்கு பணிக்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகவேலு என்பவர் மூலம் ஆற்றில் மணல் எடுத்துள்ளார். பணி முடிந்த நிலையிலும் மணல் எடுக்கப்பட்ட ஆழமாக பகுதியை மூடாமல் விட்டுள்ளததால் அதில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. இதில் ஆழம் தெரியாமல் மாணவி குளித்த போது உயிரிழந்ததாகவும் இதற்கு காரணமான ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று பெரும்பாலையில் மாணவியின் உறவினர்கள் அடுத்தடுத்து 3 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்னர்.
இது குறித்து தகவல் வந்ததையடுத்து பெரும்பாலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். பேச்சு வார்த்தையில் உறவினர்கள் சமாதானம் அடையாததால் சாலை மறியல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுப்பட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட பிறகு மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
0
0