சந்தமரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவர் கைது: 120 கிலோ சந்த மரக்கட்டைகள் பறிமுதல்

21 November 2020, 11:14 pm
Quick Share

தருமபுரி: அரூர் அரசு பொதுப்பணித்துறை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்த சந்தமரத்தை வெட்டி கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 120 கிலோ சந்த மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம், அரூரில் உள்ள பொதுப்பணித்துறையினர் பணியாற்றும் குடியிருப்பு பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தனமரம் இருந்து வருகிறது. இன்று மாலை அப்பகுதியில் சிலர் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தனமரத்தை வெட்டுவதாக மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்க்கு தகவல் வந்ததையடுத்து. அவர் <உத்திரவின்பெயரில் வனச்சரக அலுவலர் சிவகுமார் மற்றும் வனவர் வேடியப்பன் ஆகியோர் தலைமையில் கொண்ட வனத்துறையினர் அதிரடியாக அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, அங்குள்ள சந்தனமரத்தை இருவர் வெட்டி துண்டாக்குவது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை சுற்றிவளைத்த வனத்துறையினர் பிடித்து விசாரணையில் ஈடுப்பட்ட போது, அவர்கள் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் நீபத்துறை பகுதியை சேர்ந்த கோவிந்தன் மற்றும் முனியப்பன் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது அவர்களிடமிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 160 கிலோ சந்தமரக்கட்டைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Views: - 0

0

0