பாம்பு கடித்து உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு மீண்டும் வந்த பாம்பு

8 July 2021, 6:57 pm
Quick Share

தருமபுரி: பாலக்கோடு அருகே பாம்பு கடித்து உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு மீண்டும் வந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி செல்வராணி, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை என மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி பெருமாளின் மனைவி செல்வராணி தனது வீட்டின் படியின் அடியில் வைத்திருந்த உரம் மூட்டையில் உரம் எடுக்கும் போது உரம் மூட்டைக்கு இடையில் இருந்த நல்லபாம்பு காலில் கடித்துள்ளது. இதனை கண்ட செல்வராணி கூச்சலிடவே அங்கிருந்த பாம்பு அருகே உள்ள புதரின் உள்ளே மறைந்தது.

இதனையடுத்து செல்வாரணியை அவரது கணவர் பெருமாள் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதல் உதவி செய்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிக்கு அழைத்து வரும் வழியில் செல்வராணி உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த அவரை பாலக்கோடு அரசு மருத்துவமவையில், பிரேத பரிசோதனை செய்த பிறகு உடலை அடக்கம் செய்தனர். இது குறித்து பாலக்கோடு காவல்துறையினர் நேற்று இரவு இறந்து போன செல்வராணியின் வீட்டிற்கு நேரில் வந்து விசாரணையில், ஈடுப்பட்டிருந்த போது,

திடிரென செல்வராணியை கடித்த அதே பாம்பு அதே இடத்தில் மீண்டும் வந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அந்த பாம்பை அடித்துக்கொன்றுவிட்டனர். பெண்ணை கடித்த பாம்பு மீண்டும் எட்டு நாள் கழித்து அதே இடத்திற்கு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாம்பு கடித்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 128

0

0