அரூரில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக ஒன்றிய துணை செயலாளர் போஸ்டர்: அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி

4 February 2021, 5:56 pm
Quick Share

தருமபுரி: அரூரில் அதிமுக ஒன்றிய துணை செயலாளார் சசிகலாவை நிரந்தர பொது செயலாளர் என போஸ்டர் ஒட்டியதால் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா விடுதலையான பிறகு அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்று பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதே போல் அதிமுகவில் உள்ள சசிகலா விசுவாசிகளும் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர். போஸ்டர் ஒட்டி வருபவர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அதிரடியாக நீக்கி வருகின்றனர். அதே போல் தருமபுரி மாவட்டம்,

அரூர் அதிமுக ஒன்றிய துணை செயலாளர் கோட்டி என்பவர் அரூரில் பொது இடங்களில் சசிகலாவை வரவேற்றும் அதிமுகவின் நிரந்தர பொதுசெயலாளர் தியாக தலைவியே, தமிழகத்தின் எதிர்காலமே என போஸ்டர் ஒட்டி உள்ளார். இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிமுக தலைமை நிர்வாகம் சசிகலாவிற்கு போஸ்டர் ஒட்டிய ஒன்றிய துணை செயலாளர் மீது நடவடிக்கை பாயும் என கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறனர். இவரை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பல அதிமுகவினர் சசிகலாவின் ஆதரவாளராக மாறி வருகின்றனர்.

Views: - 14

0

0