சகோதரிகளிடம் நில அபகரிப்பு : எஸ்.பி.சி.ஐ.டி மீது காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

Author: kavin kumar
7 August 2021, 8:32 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் அருகே அஜ்ஜனஅள்ளியில், சகோதரிகளிடம் நில அபகரிப்பு செய்ததாக எஸ்.பி.சி.ஐ.டி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஜ்ஜனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு. இவர் உடன் பிறந்தவர்கள் மூன்று ஆண்கள் ஐந்து பெண்கள். மாற்றுத்திறனாளியான அலமேலுவின் பெற்றோர்களின் பூர்வீக சொத்து 40 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. இதில் தாய் தந்தையரின் பெயரில் சுமார் 5 ஏக்கர் ஜீவனாம்சமாக இருந்த விவசாய நிலத்தில், 90 சென்ட் நிலத்தை மட்டும் 2008ஆம் ஆண்டு தானமாக செட்டில்மென்ட் செய்துவைத்தனர்.

இந்த நிலையில் அலமேலுவின் தாயாரின் இறப்புக்குப் பின்பு நிலத்தினை அவர்களது சகோதர்களிடம் கேட்டதற்கு தான செட்டில்மெண்ட் பத்திரத்தை கொடுத்துள்ளனர். அந்த பத்திரத்தை இவரது பெயருக்கு மாற்ற சென்ற போது அப்போது அந்த நிலத்தை அவரது சகோதரர் சென்றாயபெருமாள் அவருடைய பெயருக்கு மாற்றி உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அலமேலு தனக்கு தானமாக கொடுத்த நிலத்தை உன் பெயரில் ஏமாற்றி மாற்றி உள்ளாயே என கேட்ட போது தான் எஸ்.பி.சி.ஐ.டியாக உள்ளேன் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது மிரட்டி உள்ளார்.

இதனையடுத்து அலமேலு அவர் சகோதரிகள் ஆகியோர் பென்னாகரத்தில் எஸ்.பி.சி.ஐ.டி.,யாக பணியாற்றும் சென்றாய பெருமாள் நில மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் பெற்றோர் எங்களுக்கு கொடுத்த தான செட்டில்மெண்ட் நிலத்தை என அண்ணண் சென்றாயபெருமாள் ஏமாற்றி விட்டதாகவும் இது குறித்து கேட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார் எனவே எங்களது சொத்துகளை மீட்டு தர வேண்டும். உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

Views: - 210

0

0