வன ஆராய்ச்சி மையத்தில் அடையாளம் தெரியாத இருந்த ஆண் சடலம் மீட்பு…
29 August 2020, 4:06 pmதருமபுரி: அரூர் அருகே உள்ள நவீன நாற்றங்கால் வன ஆராய்ச்சி மையத்தில் அடையாளம் தெரியாத இருந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு கலைக்கல்லூரி அருகே வனத்துறை சார்பில் நவீன நாற்றங்கால் வன ஆராய்ச்சி மையம் உள்ளது. வனத்துறையினர் இன்று காலை நவீன நாற்றங்கால் வன ஆராய்ச்சி மையத்தில் மேற்பார்வையிடும் போது ஆண் சடலம் ஒன்று இருப்பதையும், சுமார் 25 அடி தூரத்தில் நாட்டுத்துப்பாக்கியும், வேட்டையாட பயன்படுத்தபடும் லைட், பேட்டரி செல் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததையும் கண்டதையடுத்து அரூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததுள்ளனர்.
தகவலை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இறந்துபோன நபர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்ட பின்பு சடலத்தையும் கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேட்டையாட பயன்படும் நாட்டுத்துப்பாக்கி, மற்றும் லைட் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி சடலத்தை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.