டாஸ்மாக் நிறுவனத்தில் திமுக ஆட்சியிலும் ஊழல்கள் தொடர்கிறது: டாஸ்மாக் ஊழியர் சம்மேளன மாநில பொது செயலாளர் பேட்டி…

Author: kavin kumar
15 August 2021, 6:56 pm
Quick Share

தருமபுரி: டாஸ்மாக் நிறுவனத்தில் திமுக ஆட்சியிலும் ஊழல்கள் தொடர்கிறது என தருமபுரியில் டாஸ்மாக் ஊழியர் சம்மேளன மாநில பொது செயலாளர் திருச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் 10 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அச்சங்கத்தின் மாநில பொது செயலாளர் திருச்செல்வம் கலந்துகொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- டாஸ்மாக் நிறுவனத்தில் 18 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை பணி வழங்கு முறை காலவரைமுறை கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் டாஸ்மாக் சம்மேளனம் சார்பில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற உள்ளதாகவும், மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் நிறுவனம் மட்டுமே அரசாங்கத்திற்கு சொந்தமானது. இதில் மதுபானங்கள், மற்றும் மதுபானங்கள் கொண்டு வரும் லாரிகள்,

மதுக்கடைகள், பார்கள் இவை அனைத்தும் தனியார்களுக்கு சொந்தமனதாக உள்ளது. இவை அனைத்தும் தனியார்கள் ஆதயமடைய கூடிய வகையில் டாஸ்மாக் நிர்வாகம் செயல்படுகிறது. பார்கள் நடத்துவதில் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளால், சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்ப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட மதுபானபார்கள் நடத்துபவர்களின் அத்துமீறல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. கொரோனா ஊரடங்கில் தமிழகத்தில் அனைத்துப்பகுதிகளிலும் சட்ட விரோதமாக பார்கள் செயல்பட்டு வருகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த ஆட்சியை கரப்சன், கலக்சன் என கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியை தொடர்ந்து தற்போதும் ஊழல்கள் நடைபெற்றுகொண்டு தான் வருகிறது. இதனை ஏன் முதல்வர்கண்டுகொள்ளவில்லை. டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தனியாக அதிகாரிகளே கிடையாது, டாஸ்மாக்குக்கு வரும் அதிகாரிகள் வேறு துறையிலிருந்து வந்தவர்கள், அவர்கள் இரண்டு ஆண்டுகள் பணி செய்து தவறான நடவடிக்கைகள் மூலம் பெரும் தொகையை அள்ளி செல்கின்றனர். டாஸ்மாக் ஊழியர்களை பற்றியும், ஊழலை பற்றியும் கவலைபடாத அதிகாரிகளை இந்த அரசாங்கம் ஊக்குவிக்கின்றது என கூறினார்.

Views: - 203

0

0