சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா: அலகு குத்திக்கொண்டு பால்குடம் எடுத்த பக்தர்கள்

28 January 2021, 2:46 pm
Quick Share

தருமபுரி: குமாரசாமிப்பேட்டையில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்திக்கொண்டு பால்குடம் எடுத்தனர்.

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். இந்த தேர் திருவிழா தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத தனி சிறப்பு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பெண்கள் மட்டும் கலந்துகொண்டு தேர் இழுக்கும் நிகழ்சி நடைபெறும்.

அதே போல் இந்தாண்டு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்திருவிழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. முன்னதாக இன்று தைபூசத்தையொட்டி கடை வீதியிலிருந்து குமாரசாமிப்பேட்டை முருகன் கோயில் வரை ஏராளமான பக்தர்கள் வாயில் அலகு குத்திக்கொண்டும், காவடி எடுத்தும் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பெண்கள் கொண்டு சென்ற பால் சிவசுப்பிரமணிய சுவாகிக்கு பால் அபிஷேகம் செய்து வழிப்பட்னர்.

Views: - 0

0

0