தாய் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி

2 November 2020, 6:57 pm
Quick Share

தருமபுரி: அரூர் அருகே அச்சல்வாடி கிராமத்தில் தாய் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன்- செல்வி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளது. வாஞ்சிநாதன் பெங்களூரில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் பிரசவத்திற்காக செல்வி தனது தாய் வீட்டில் கடந்த நான்கு மாதங்களாக தங்கியிருந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தனது இரு குழந்தைகளுடன் தூக்கிபோட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டதை அடுத்து அருகே இருந்தவர்கள் கிணற்றை வந்து பார்த்தபோது செல்வி தனது இரு குழந்தைகளுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததோடு கிணற்றில் குதித்து செல்வியை காப்பாற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து சடலமாக இரு குழந்தைகளையும் மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வி எதற்காக தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முயற்சி மேற்கொண்டார் என்பது குறித்து அரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அச்சல்வாடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Views: - 15

0

0