காவல்துறை சார்பில் பெண்கள் உதவி மையம் துவக்க விழா

15 July 2021, 2:54 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் உதவி மையம் துவக்க விழா நடந்தது.

தருமபுரி மாவட்டத்தில், 17 காவல் நிலையங்கள் உள்ளது. இந்த காவல் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில், பெண்களின் பாதுகாப்பு கருதியும், குழந்தை திருமணத்தை தடுக்கவும், சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்கவும், பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி தீர்வு காணும் வகையில், இன்று தருமபுரி மாவட்ட காவலர் ஆயுதபடை மைதானத்தில், காவல்துறை சார்பில், பெண்கள் உதவி மையம் துவக்க விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் தலைமையில் நடந்தது.

இந்த நிகழ்சியில் பெண்கள் புகார் அளிக்க 181 என்கிற தொலை பேசி எண் உதவி மைய அறிமுக விளம்பர பலகை வெளியிடப்பட்டது. மேலும் பெண்கள் கொடுக்கும் புகார்கள் மீது நேரில் விரைந்து சென்று விசாரணை செய்ய மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு தலா ஒரு பைக் மற்றும் மடி கணிணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியில் சார் ஆட்சியர் சித்ரா உள்ளிட்ட பல்வேறு அரசுதுறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Views: - 120

0

0