வீடு கட்ட அனுமதி அளிக்காமல் அலைக்கத்த பஞ்சாயத்து தலைவர்: அலுவலகத்திற்குள் சிறை வைத்த தனிநபர்

1 March 2021, 9:09 pm
Quick Share

தருமபுரி: சிவாடியில் வீடு கட்ட அனுமதி அளிக்காமல் அலைக்கடைப்பதாக பஞ்சாயத்து தலைவரை பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் பூட்டி சிறை வைத்ததால் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள சிவாடி கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீடுக்கட்டி உள்ளார். இந்நிலையில் தரைத்தலத்தில் கட்டிய வீட்டின் மேல் புதிய வீடுக்கட்ட பஞ்சாயத்து தலைவரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு சிவாடி பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் ஏற்கெனவே உங்கள் வீட்டின் பெயரில் இந்தியன் வங்கியில் கடன் பெற்றுள்ளிர்கள், அந்த கடனை முழுமையாக கட்டி அதற்கு என்.ஓசி.சான்றிதழ் வாங்கி வாருங்கள் என கூறி உள்ளார். இதனையடுத்து அசோக்குமார் வங்கியில் இருந்த கடனை முழுமையாக செலுத்தி உள்ளார். இதற்கு என். ஓ.சி., அடுத்த வராம் வழங்குவதாக வங்கி மேலாளார் கூறி உள்ளார். இதனையடுத்து அசோக்குமார் மீண்டும் பஞ்சாயத்து தலைவரிடம் வந்து வங்கியில் பணம் செலுத்திவிட்டேன், என்.ஓ.சி., அடுத்த வாரம் கொடுப்பதாக கூறி உள்ளனர்.

எனவே நீங்கள் வீடுக்கட்ட அனுமதியளிக்க வேண்டும் என கூறி உள்ளார். இதற்கு பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நேரம், மூன்று மாதம் கழித்து அனுமதியளிப்பதாக கூறி உள்ளார். வீடுக்கட்ட அனுமதியளிக்காமல் பஞ்சாயத்து தலைவர் தொடர்ந்து அலைக்கடைப்பதாக அசோக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்த பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகத்தை உள்ளே வைத்து பூட்டி சிறைப்பிடித்து. அலுவலகம் முன்பு அமர்ந்து அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை அறிந்த தொப்பூர் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் நேரில் வந்து சிறை வைத்த பஞ்சாயத்து தலைவரை விடுவிக்குமாறு கேட்டுகொண்டனர். பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறைபிடித்த பஞ்சாயத்து தலைவரை விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து வருகின்றனர். வீடுக்கட்ட அனுமதியளிக்க தொடர்ந்து அலைக்கடைப்பதாக பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ளே பஞ்சாயத்து தலைவரை பூட்டி சிறை வைத்த சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து பஞ்சாயத்து தலைவர் கூறும் போது 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீட்டிற்கு தற்போது அனுமதி கேட்டனர். இதற்கு சட்டப்படி இதற்கு அனுமதியளிக்க முடியாது தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் முடிந்த பிறகு உரிய ஆவணத்தை கொண்டு வந்தால் அனுமதியளிப்பதாக கூறினேன் ஆனால் அதற்கு என்னை அறையில் வைத்து பூட்டி விட்டனர். என்னை பணி செய்ய விடாமல் தடுத்த அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறினார்.

Views: - 9

0

0