ஊராட்சி மன்ற தலைவியை தாக்கிய முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவர் : கைது செய்யக்கோரி தி.மு.க., ஊராட்சி தலைவி தர்ணா

13 July 2021, 6:56 pm
Quick Share

தருமபுரி: காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளியில், அ.தி.மு.க., முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவரை கைது செய்யக்கோரி தி.மு.க., ஊராட்சி தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளி ஊராட்சி குட்பட்ட கீழ்கொள்ளுப்பட்டி கிராமத்தில், நேற்று ஊராட்சி தலைவி கவுரி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளுக்கான, 2 இலட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் பூமி பூஜை போட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவர் மது, என்பவர் ஏற்கெனவே தனது மனைவி ஊராட்சி தலைவராக இருந்த போது இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் இந்த பணியை நான் தான் செய்வேன், இதற்கு பூமி பூஜை போட முன்னாள் அமைச்சர் அன்பழகன் வருகிறார். நீங்கள் பூமி பூஜை போடக்கூடாது என ஊரட்சி தலைவி கவுரியிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போது,

மாது ஊராட்சி தலைவி கவுரியை தகாத வார்த்தைகளை கூறி தாக்கி உள்ளார். அப்போது இரு தரப்பினருக்குடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து தாக்கப்பட்ட ஊராட்சி தலைவி கவுரி மாதுவை கைது செய்யக்கோரி அதே இடத்தில் தர்ணா போராட்டத்தில், ஈடுப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த டி.எஸ்.பி.,தினகரன். தாசில்தார் சின்னா, பி.டி.ஒ., கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தர்ணாவில் ஈடுப்பட்ட ஊராட்சி தலைவியிடம் சமாதான பேச்சு வார்த்தியில் ஈடுப்பட்டனர். பின்னர் மாது மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து தர்ணாவை கைவிட்டார். திமுக ஊராட்சி மன்ற தலைவியை தாக்கியது குறித்து மாதுவிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 112

0

0