பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்

3 November 2020, 5:13 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் 2ம் நாளாக சட்டமன்றம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் அமைப்பு சார தொழிலாளர்களுக்கு உடனடியாக நல வாரியம் அமைக்க வேண்டும், தீபாவளி உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், பாசிக், பாப்ஸ்கோ உள்ளிட்ட பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளை மீண்டும் திறந்த இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி

புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நேற்றைய தினம் ஆளுநர் மாளிகை மற்றும் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது பெரியகடை போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று இரண்டாம் நாளாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர். காமராஜர் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று சட்டமன்ற அருகே தர்ணா போராட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Views: - 12

0

0