திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை: கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை

8 May 2021, 11:28 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி கொலை செய்த கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் கிருஷ்ணாராவ் 3 வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் . இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணமாகி 2017ம் ஆண்டு விவாகாரத்து ஆகி உள்ளது. இந்நிலையில் ராம்குமார் தனது அம்மாவுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் முருக பவனம் அருகே லாரி பார்க்கிங் கடை வைத்துள்ளார். தினமும் இரவு கடையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் இன்று (08.05.21) இரவு கடையை முடித்து வீட்டிற்கு ராம்குமார் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் – கோவிந்தாபுரம் மின்மயான சாலையில் வந்த ராம்குமார் சென்றார்.

பின்னால் வந்த மர்ம நபர்கள் தாக்கி மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்து தப்பி ஒடி விட்டனர். இதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஒடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டியா காரணமா என பல்வேறு கோணங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 110

0

0