தத்ரூபமான முறையில் நடைபெற்ற பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

1 September 2020, 4:23 pm
Quick Share

அரியலூர்; அரியலூர் ஐயப்பனேரியில் தத்ரூபமான முறையில் நடைபெற்ற பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் நகரில் உள்ள ஐயப்பனேரியில் பேரிடர் காலங்களில் நீர்நிலைகளில் சிக்கி கொள்ளுபவர்களை காப்பாற்றி முதலுதவி அளிப்பது சம்மந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புதுறை சார்பில் நடைபெற்றது. இதில் மழைகாலங்களில் ஆறுகள், ஏரி குளங்களில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கேன்கள், டயர் டியூப்கள், படகுகள் மூலமாக தீயணைப்பு துறையினர் எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தத்ரூபமான முறையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி காண்போரை வியப்படைய செய்தது. இதில் தீயணைப்பு துறை வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 4

0

0