திருவாரூர் மாவட்டத்தில் பயீர் காப்பீடு திட்டத்தில் ரூ201 கோடி வழங்கல்: மாவட்ட ஆட்சியர் சாந்தா பேட்டி

5 November 2020, 6:23 pm
Quick Share

திருவாரூர்: பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறும் சென்ற ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் பயீர் காப்பீடு திட்டத்தில் ரூ201 கோடி வழங்கியுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நெடும்பலம் அரசு வேளாண் விதைப் பண்ணையில் இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா ஆய்வு மேற்கொண்டார். அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல் ரகங்களையும், அதற்கு பயன்படுத்தப்படும் மருந்து மட்டும் நிறுத்தி களைப் பற்றியும் தண்ணீர் வரத்து பற்றியும், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு பணிபுரிந்த விவசாய தொழிலாளர்களும் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை உடனடியாக செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சாந்தா, இந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய அவகாசம் இருந்தாலும், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 488 செலுத்தி பயிர் காப்பீடு பயன் பெறுமாறும் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்தி 48 ஆயிரத்து எக்டேர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர் செய்யப்பட்டுள்ளது எனவும், பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து ஒருவேளை மழை அதிகமாக பெய்தால் தங்களை பாதுகாத்துக்கொள்ள பயனாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு திருவாரூர் மாவட்டத்தில் 201கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. வங்கி மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் விடுபட்டவர்கள் நேரடியாக புகார் தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

Views: - 45

0

0