இருவேறு விவசாய கிணறுகளில் இருந்து ஆண் மற்றும் பெண் சடலம் கண்டெடுப்பு

2 February 2021, 8:09 pm
Quick Share

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே இருவேறு விவசாய கிணறுகளில் இருந்து ஆண் மற்றும் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் கீழ் ஒட்டிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்குடி கிராமத்திலுள்ள விவசாயத்திற்கு பயன்படாத கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்று பகுதியை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் கிணற்றில் பெண் சடலம் மிதப்பதைக் கண்டு கிராமத்தில் உள்ளவர்களுக்கும் வாலாஜாபாத் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். வாலாஜாபாத் போலீசார் விரைந்து சென்று அழுகிய நிலையில் கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் வாலாஜாபாத் செல்லும் சாலையில் ஆற்றுப்படுகை ஒட்டியுள்ள பாழடைந்த விவசாய கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அந்த கிணற்றில் பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .இதனை அடுத்து அங்குவந்த வாலாஜாபாத் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இரண்டு சடங்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 14

0

0