தொடர்ந்து அதிகாரிக்கும் கொரோனா… அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிப்பு…

3 August 2020, 5:47 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அனைத்து நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது வரை ஆயிரத்து 1255 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமலில் இருப்பதால், பத்திர பதிவு அலுவலகம், நீதிமன்றம், கிளைச் சிறை, கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் அருகருகே உள்ளதால் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக உள்ளதால்,

எப்போதும் பரபரப்பாக உள்ள அரசு அலுவலகங்களில் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டுள்ளதா தொடர்ந்து பரிசோதனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கிருமிநாசினிகள் கொண்டு தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டர். மேலும் பேரூராட்சியில் உள்ள பல்வேறு இடங்களில் சாலைகளில் தடுப்புகளை அமைத்து வைரஸ் தொற்று பரவாமல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 9

0

0