கொலை வழக்கில் கைதான குற்றவாளிக்கு கொரோனா: காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு

12 September 2020, 3:22 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொலை வழக்கில் கைதான குற்றவாளிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதையடுத்து காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

புதுச்சேரி வில்லியனூர் கணுவாய்பேட்டை சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் ராம் என்கிற ராம்குமார். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வில்லியனூரில் இருந்து திருக்காஞ்சி செல்லும் சாலையில் தலையில் கல்லை போட்டு கொலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் ராமுவின் நண்பர் முல்லை வளவன் குடிபோதையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்த போலீசார் கொரோனா பரிசோதனைக்காக அரசு கோவிட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், குற்றவாளிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து வில்லியனூர் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் குற்றவாளியை கைது செய்த போலீசார் தங்களை தனிமைபடுத்தி கொண்டனர்.

Views: - 5

0

0