நெல்லையில் பள்ளிகள், கோயில்கள் உள்ள இடத்தில் திரையரங்கு திறப்பதற்கு அனுமதி கோரி வழக்கு தள்ளுபடி

11 September 2020, 7:27 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: நெல்லையில் பள்ளிகள், கோயில்கள் உள்ள இடத்தில் திரையரங்கு திறப்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையை சேர்ந்த அபுதாஹிர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
” நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக நேதாஜி ரோட்டில் அலங்கார் என்ற பெயரில் தியேட்டர் இயங்கி வந்தது. அதன் அருகில் கோவில், மசூதி மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுதலங்கள் மற்றும் பல கல்வி நிலையங்களும் இயங்கி வந்ததால் பாதுகாப்பு கருதி அந்த தியேட்டர் மூடப்பட்டது. இந்நிலையில் தியேட்டர் அதே இடத்தில் திறப்பதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

தற்போது அதனை சுத்தியும் பல்வேறு வழிபாட்டு தலங்களும், கல்வி நிலையங்களும் மற்றும் உழவர் சந்தைக்கு செல்லக்கூடிய பகுதியாகவும், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாகவும், மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கட்டிய பகுதியாகவும் விளங்குவதால், அந்த இடத்தில் தியேட்டர் அமைவது பொது மக்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பானதல்ல. இது தொடர்பாக உயர் அதிகாரிக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.எனவே மேலப்பாளையம் பகுதியில் தியேட்டர் அமைவதற்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு,
வழக்கில் எவ்வித முகாந்திரம் இல்லாததால், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Views: - 6

0

0