ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட வியாபாரி குடும்பம்: நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியரிடம் மனு

Author: kavin kumar
21 October 2021, 5:32 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வருடங்களாக வியாபாரியின் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரி குடும்பத்தினர் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். மளிகை கடை நடத்தி வரும் இவர் அங்குள்ள 5 ஏக்கர் மாந்தோப்பினை குத்தகை எடுத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மாந்தோப்பு உரிமையாளருக்கும் கிராமத்தினருக்கும் பிரச்சினை இருப்பதால் மாந்தோப்பினை குத்தகைக்கு எடுக்க கூடாது எனவும், அதனை மீறினால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என கூறி, செல்வராஜ் குடும்பத்தை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மூன்று வருடங்களாக வீட்டு வரிவசூல் செய்யக்கூடாது கோவிலில் வழிபட அனுமதிக்கக்கூடாது என முக்கிய கிராம நிர்வாகிகள் கிராம மக்களுடன் தங்களை சேரவிடாமல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஏற்கனவே ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால்
பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் செல்வத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Views: - 130

0

0