மது வாங்கி கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு கத்திக்குத்து

26 January 2021, 2:24 pm
Quick Share

சென்னை: புழல் அருகே இலங்கை அகதிகள் முகாமில், மது வாங்கி கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு கத்திக் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அடுத்த புழல் காவாங்கரை பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் அகதிகளாக வசித்து வரும் கஜேந்திரன்( 38) மற்றும் ரவீந்திரன் (40) இருவரும் நண்பர்கள்.கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒருவருக்கு ஒருவர் மது அருந்தி விட்டுக்கு சென்று விட்டனர். அதே போல கஜேந்திரனும் ரவீந்திரனும் ஒன்றாக முகாமில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த போது கடந்த வாரம் நான் உனக்கு மது வாங்கி கொடுத்தேன். இந்த வாரம் நீ வாங்கி தர வேண்டும் என்று கஜேந்திரனை கேட்டதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது.

பின்னர் கைகலப்பாக மாறியதில் ஆத்திரமடைந்த ரவீந்திரன் அருகில் இருந்த கத்தியை எடுத்து கஜேந்திரன் வயிற்றில் சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் வலியால் பயங்கரமாக அலறி துடித்ததில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் அவரை காப்பாற்ற உடனே 108 க்கு ஆம்புலன்சில் கஜேந்திரனை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த புழல் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்கு பதிவு செய்து ரவீந்திரன் என்கின்ற இந்திரன் கைது செய்து விசாரித்து வருகின்றார்.

Views: - 12

0

0