கோவில் தேர்தல் தொடர்பாக தகராறு: ஒரு பிரிவினர் திடீர் சாலை மறியல்…

Author: Udhayakumar Raman
28 November 2021, 3:30 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் கோவில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட தகராறு தெடர்பாக ஒரு பிரிவினர் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருச்சி கள்ள தெருவில் காளிகாபரமேஸ்வரி கோவில் உள்ளது.இந்த கோவில் பத்தர் என்றும் அழைக்கப்படுகிற ஆசாரி சமுதாயத்திற்கு சொந்தமானது. இந்த கோவிலில் நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதற்காக தேர்தல் நடப்பது வழக்கம். தேர்தலில் 5 நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்தலில் சுமார் 6000 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உள்ளவராக உள்ளனர். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாக தேர்தல் நடைபெற இருந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. இதில் காளிகாபரமேஸ்வரி ஆலயமும் மூடப்பட்ட நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பாதிப்பின் காரணமாக தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், தற்போது கொரோனா நோய்த் தொற்று குறைவின் காரணமாக மத வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் காளிகாபரமேஸ்வரி கோவிலும் திறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்தல் நடப்பதற்கான வழிமுறைகளை ஈடுபடுவதற்கான கூட்டம் இன்று காலை கோவிவில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தற்காலிக கூட்டத்தின் தலைவராக மணி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டம் தொடங்கியது. இதில் சுமார் 80 பேர் கலந்து கொண்டனர்.இதில் தமிழ் பத்தர் மற்றும் தெலுங்கு பத்தர் என்று இரண்டு குழுவினராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு பத்தரின் உறுப்பினர்கள் குறைந்த அளவு உள்ளதால் தேர்தல் நடக்கும் சமயத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது என்பதை கருத்தில் கொண்டு தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக்கூறி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் கோவிலின் முன்பு திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை எச்சரித்து கூட்டத்தை கலைத்தனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு வந்து புகார் செய்ய அறிவுறுத்தினர். மேலும் தீடீர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 116

0

0