தருமபுரியில் 4295 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கல் :மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பேட்டி

Author: kavin kumar
25 August 2021, 4:31 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் 100 நாட்களில் 4295 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் 30 கோடி ரூபாய் மதிப்பில் நலதிட்ட உதவிகள் வழங்கபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி பேட்டி.

சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் பொது மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யபடும் என வாக்குறுதி அளித்து அதன் பேரில் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களில் முதியோர் உதவி தொகை, புதிய குடும்ப அட்டை, வீட்டு மனை பட்டா, பசுமை வீடுகள் உள்ளிட்டவைகளை வேண்டி கோரிக்கைகளை பொது மக்கள் மனுவாக அளித்திருந்தனர். அதனடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொருப்பேற்று தன்னுடைய தேர்தல் வாக்குறுதியின்படி ஆட்சி பொருப்பேற்று 100 நாட்களில் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு தமிழக முழுவதும் நடவடிக்கை எடுக்கபட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று தருமபுரியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொது மக்களின் அளித்த மனுக்கள் மீது முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் முன்னிலையில் இன்று 156 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 708 மனுக்கள் பெறப்பட்டு பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பரிச்சீலனை செய்யபட்டு தகுதியான 4 ஆயிரத்து 295 பயனாளிகளுக்கு 30 கோடி ரூயாப் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 100 நாட்களில் வழங்கபட்டு உள்ளது என்றார்.

மேலும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 700 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூ.178.28 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 662 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தினமும் சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு மாவட்டம் முழவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது என்றும் கூறிய அவர், மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவது மகிழ்சியளிக்கிறது.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொது மக்கள் கடைபிடித்து தொற்று இல்லா மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தை கொண்டு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். மேலும் ஆவர் கூறுகையில், தமிழகத்தின் சுற்றுலா தளமான ஒகேனக்கலில் தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி தற்போது பொது மக்களுக்கு தடை நீடித்து வருகிறது. விரைவில் சுற்றுலா தளம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கபடும் என கூறினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, சார் ஆட்சியர் சித்ரா விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 197

0

0