மாற்றுப் பாதைகள் மற்றும் மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

1 February 2021, 7:47 pm
Quick Share

வேலூர்: தமிழகம் ஆந்திராவை இணைக்கும் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் சீரமைக்கும் பணி விரைவில் துவக்கம் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

காட்பாடியில் தமிழகத்தையும் ஆந்திராவையும் இணைக்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளது .இந்த மேம்பாலம் கடந்த 1990 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1996 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கபட்டது. வேலூரில் இருந்து சித்தூர், திருப்பதி,கேவிகுப்பம், குடியாத்தம், செங்குட்டை, காட்பாடி, லத்தேரி ஆகிய பகுதிகளுக்கு இந்த பாலத்தின் வழியாக தான் முழுமையாக போக்குவரத்து இயக்கப்படுகிறது. சுமார் 22 ஆண்டுகளாக இந்த ரயில்வே மேம்பாலம் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த மேம்பாலம் கனரக வாகனங்களால் பாலம் வலுவிழந்து ஆங்காங்கே விரிசல்கள் உள்ளது.

இதில் தென்னக ரயில்வே மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து செய்யவேண்டிய பணி இந்த துறைகளின் மெத்தனத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புணரமைப்பு பணிகள் பெயரளவுக்கு செய்தாலும் பாலம் பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாலம் முழுவதுமாக வலுவிழந்துள்ளதால் உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாலம் துண்டிக்கப்பட்டால் ஆந்திராவிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு செல்லும் வழி முழுவதும் துண்டிக்கப்படும் வாகனங்கள் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் மேலும் வேலூரிலிருந்து காட்பாடி வழியாக செல்லக்கூடிய பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள்.

இதனால் இதற்கு மாற்றுவழி குறித்தும் பாலத்தின் நிலைமை குறித்தும் இன்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளரிடம் கூறுகையில், விரைவில் இந்த மேம்பாலம் சீரமைக்கும் பணி துவங்க உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவடைந்து விடும். அதுவரை பாலம் முழுவதுமாக பொதுமக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்படும் மாற்று வழிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Views: - 15

0

0