விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்துஇந்தியன் புக் ஆப்ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்த பள்ளி மாணவி: மாணவியை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் பாராட்டு

11 September 2020, 8:49 pm
Quick Share

வேலூர்: கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொரோனா ஒழிக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து இந்தியன் புக் ஆப்ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்த 1 2ஆம் வகுப்பு பள்ளி மாணவியை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பாராட்டினார்.

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ஆறுமுகம் மற்றும் ராஜலட்சுமி தம்பதியரின் மகள் லாவண்யா. இவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி தொடர்ந்து இந்திய அளவிலும்சர்வதேச அளவிலும் நடக்கும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கொரோனா காலத்திலும் மக்கள் முகக்கவசம் அணியாமல் விழிப்புணர்வு இல்லாமலும் இருப்பதை போக்கவும், கொரோனா ஒழிய அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற வகையில்,

இந்தியாவில் கொரோனாவை முகக்கவசம் அணிந்து ஒழித்திடுவோம் என்பதை வலியுறுத்தும் வகையில், ஒரு மணி நேரத்தில் ஓவியம் ஒன்றை வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை இந்தியன் புக் ஆப்ரெக்கார்ட்ஸ் சாதனையாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாணவி லாவண்யா மற்றும் அவரின் பெற்றோரை அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன் மாணவியின் சாதனையை பாராட்டி இனி தொடர்ந்து இது போன்று ஓவியங்களை வரைய வேண்டும் என்று மாணவிக்கு வாழ்த்துக்களை கூறினார்.

Views: - 4

0

0