மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி: 350க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் பங்கேற்பு
Author: kavin kumar3 October 2021, 5:59 pm
மதுரை: திருமங்கலத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 350க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது . இப்போட்டியில் மதுரை , மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கலந்துகொண்டனர். 8 வயது முதல் 22 வயது வரை உள்ள சிறுவர் , சிறுமிகள் ஆர்வமுடன் பங்கேற்ற இப்போட்டியில், மின்னல் வேகத்தில் சிலம்பத்தை சுற்றியும், சிலம்பத்தை வைத்து பாய்ந்து தாவியவாறு திறமையை வெளிப்படுத்திய காட்சி காண்போரை வியப்படையச் செய்தது. மேலும், கருள்வீச்சுப் போட்டியில், சிறுமிகளிடையே போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனிடையே 60 வயதுடைய முதியவர் ஒருவர் சிலம்பத்தை அசுரவேகத்தில் சுழற்றிய காட்சி அனைவரின் கண்களையும் ஈர்க்கச் செய்தார். இப்போட்டியில், ஒருங்கிணைப்பாளர்கள் சிறந்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும், கேடயங்களும் வழங்கி கௌரவித்தனர்.
0
0