மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

18 July 2021, 2:33 pm
Quick Share

மதுரை: மதுரையில் பாரத பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதுரை மா நகர் காங்கிரஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். இந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசு தொகையாக 7 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசு நான்காவது பரிசு தலா 3 ஆயிரம் ரூபாயும், மனித உரிமை துறை மாநில பொதுச் செயலாளர் பி.ஜே. காமராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எஸ்.பி.முருகன், பஞ்சாயத்து ராஜ் தலைவர் முத்துக்குமார், பகுதி தலைவர்கள் பூக்கடை கண்ணன், வார்டு தலைவர் குமரகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 105

0

0