சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை வழங்கல்

8 February 2021, 2:57 pm
Quick Share

சேலம்: காவல்துறை மற்றும் பொது மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் மாவட்ட அளவிலான இறகு பந்து வெற்றி பெற்ற காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள்வெற்றி பெற்ற காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அணியினருக்கு சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் கோப்பைகளை வழங்கினார்.

ரோட்டரி கிளப் ஆப் சேலம் மெட்ரோபாலிஸ் (metropolis) மற்றும் சேலம் மாநகர காவல்துறை இணைந்து நடத்திய போலீஸ் பொதுமக்களுக்கு இடையே ஆன நல்லுறவு சேலம் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி சேலம் சின்னதிருப்பதியிலுள்ள The Golden Health Club ல் நடைபெற்றது. இப்போட்டியினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் T. செந்தில்குமார்,I.P.S.,தொடங்கி வைத்தார். இப்போட்டியில் காவல்துறை சார்பில் 40 அணிகளும் பொதுமக்கள் சார்பில் 40 அணிகளும் பங்கேற்றன. நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்த இறகு பந்து போட்டியில் காலிறுதி அரையிறுதி போட்டிகள் நடைபெற்ற இறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இதில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள் ஆகட்டும் சரி, பொதுமக்கள் அணி ஆகட்டும் சரி மிகுந்த ஆவேசத்துடன் வெற்றி மட்டும் ஒன்றினை குறிக்கோளாகக் கொண்டு தங்களை மறந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இறுதியாக மகளிருக்கான அணியில் பெண் காவல் ஆய்வாளர்கள் M. நித்தியா மற்றும் T. சிவகாமி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். உயர் அதிகாரிகளுக்கான அணியில் செல்வன் பிரித்வின் மற்றும் தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர்கள் முதலிடம் பிடித்தனர். ஆண்களுக்கான அணியில் தலைமை காவலர்கள் செந்தில் மற்றும் சரவணன் ஆகியோர்கள் முதலிடம் பிடித்து இப்போட்டிக்கான சுழல் கோப்பையை தட்டிச் சென்றனர்.

இதற்காக நடைபெற்ற விழாவில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். உடன் காவல் அதிகாரிகள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Views: - 0

0

0