மூதாட்டியிடம் கவனத்தை திசை திருப்பி நகை மற்றும் பணம் பறிப்பு: மர்ம நபர்கள் கைது

20 October 2020, 11:16 pm
Quick Share

சென்னை: புழல் அருகே மூதாட்டியிடம் கவனத்தை திசை திருப்பி நகை மற்றும் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அடுத்த புழல் சிவராஜ் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் செந்தாமரை. இவர் புழலிருந்து மாதவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் வங்கியில் கடந்த இரண்டு வராங்களுக்கு முன்பு பணம் 5 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள தனது மகன் விஜயராஜ் என்பவரது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மர்ம மனிதர் ஒருவர் பாட்டி நீங்கள் கழுத்தில் செயின் போட்டு இருக்கின்றீர்கள், அதனை கழட்டி உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளுமாறு அவரது கவனத்தை திசை திருப்பி , தான் அந்த பர்சை வாங்கிக் கொண்டு அவரது செயினை கழற்றி வைப்பது போல் வைத்து அதன் உள்ளே இருந்த 5 பணத்தையும், மூதாட்டியிடம் இருந்த 3 பவுன் தங்க நகையையும் அவரது கைப்பையில் வைத்துக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு அங்கிருந்து நைசாக நழுவினர்.

வீட்டுக்குச் சென்ற மூதாட்டி பையைப் பார்த்ததும் அதில் பணமும் நகையும் இல்லாதது கண்டு திடுக்கிட்டு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் மாதவரம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட மாதவரம் காவல் நிலைய போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிபடை அமைத்து தீவிர வேட்டையில் இறங்கி தேடிவந்தனர். இதனையடுத்து மாதவரம் சரக துணை ஆணையார் பாலகிருஷ்ணன் அறிவுரைப்படி மாதவரம் உதவி கமிஷனர் அருள் சந்தோஷமுத்து தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் முயற்சியில் இறங்கினார்.

மூதாட்டியிடம் வழிப்பறி செய்த போது, அதில் மூவர் ஆட்டோவில் வந்து இறங்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆட்டோ எண்களை வைத்து தேடி வந்த நிலையில், கடந்த வாரம் மாதவரம் தபால் பெட்டி அருகே குறிப்பிட்ட ஆட்டோவை பிடித்து அதில் இருந்த கார்த்திக் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குற்ற பின்னணியில் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் முக்கிய குற்றவாளியான மகபூப் பாஷா என்பவரை மாதவரம் மூலக்கடை அருகே பொறி வைத்து பிடித்த போலீசார், அவருடன் இருந்த சுரேஷ் என்ற குள்ள சுரேஷ் மற்றும் பாஸ்கர், தனசேகர் ஆகிய மூவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

அதில் மகபூப்பாஷா என்பவன் இதுபோல் பெண்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் பணம் நகை திருடுவதில் பலே கில்லாடி என தெரியவந்தது. மேலும் மகபூப்பாட்ஷா மீது செங்குன்றம், மாதவரம், திருவிக நகர் போன்ற காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 12 சவரன் நகை மற்றும் ஒரு ஆட்டோ இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 13

0

0