7-பேர் விடுதலையில் தி.மு.க கூட்டணியில் ஒத்த கருத்து இல்லை:வேலூரில் இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன் பேட்டி

7 November 2020, 9:24 pm
Quick Share

வேலூர்: 7-பேர் விடுதலையில் தி.மு.க கூட்டணியில் ஒத்த கருத்து இல்லை என்றும், ரஜினி தனது அரசியல் வருகை குறித்து முற்றுப்புள்ளி வைக்கவில்லை கமா தான் போட்டுள்ளார். அவர் அரசியலுக்கு வந்து களம் காணுவார் என வேலூரில் இந்திய குடியரசு கட்சி செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட நாள் சிறையில் உள்ள 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். 7-பேர் விடுதலையில் தி.மு.க கூட்டணியில் ஒத்த கருத்து இல்லை. பா.ஜ.கவுக்கும் தெளிவான கருத்து இல்லை. 7 பேர் விடுலையில் முடிவெடுப்பவர்கள் மத்திய அரசு தான் இனியும் அவர்களை சிறையில் வைத்திருப்பது சரியல்ல. ரஜினிக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவர் எனது நண்பர் எனவே அவரது உடல் நிலைதான் முக்கியம். ஆனால் இன்னும் அவர் அரசியலுக்கு வந்து களம் காண ஜனவரி, பிப்ரவரியில் கூட வாய்ப்பு உள்ளது.

கட்சி துவங்கி விரைவில் ஆட்சி அமைத்த சம்பவங்கள் தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கும், ஆந்திராவில் என்.டி.ஆருக்கும் நடந்துள்ளது. அதே சமயம் ரஜினி அண்மையில் வெளியிட்ட தனது அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைக்கவில்லை, கமா(,) தான் போட்டுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாதி தேர்தலை நடத்திவிட்டு மீதி தேர்தலை ஓன்றரை ஆண்டுகாலம் நடத்தாமல் உள்ளதால் தமிழகத்தில் பாதி இடங்கள் காலியாக உள்ளது இது மிகப்பெரிய ஜனநாயக சிதைவு. தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை 40 ஆக உயர்த்த வேண்டும். அதில் தனி தொகுதிகளில் ஒன்றை கூட்டு 8 ஆக உயர்த்த வேண்டும். தமிழகத்தில் 2021 கணக்கெடுப்பு படி 21% தலித் மக்கள் உள்ளனர்.

இதற்கு ஏற்றார் போல் 20% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி அனைத்து தலித் அமைப்புகளையும் ஒன்று திரட்டி பிரச்சிரத்தில் ஈடுபடுவோம். இது குறித்து ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் யாரும் வாய்திறப்பது இல்லை. தத்துவார்த்த ரீதியி சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை தான். இருந்த போதும் மற்றவர்கள் கேட்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதுவரை கூட்டணி குறித்து உறுதி படுத்தப்படவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு சில முக்கிய கோரிக்கைகள் கூட அரசின் கவனத்திர்க்கு கூட போகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 16

0

0