திமுக கிளை கழக செயலாளர் சரமாரியாக வெட்டி கொலை

2 September 2020, 2:42 pm
Quick Share

செங்கல்பட்டு: ஊரப்பாக்கம் அருகே திமுக கிளை கழக செயலாளரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் பார்த்திபன். இவர் கருமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் பெயிண்டிங் வேலைக்கு வண்டலூர் பகுதிக்கு சென்று இரவு சுமார் 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வரும்போது ஊரப்பாக்கம் அடுத்த பிரதான சாலையில் 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பார்த்திபனை சரமாரியாக வெட்டியது. இதில் பார்த்திபன் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். பார்த்திபன் பொதுநல சேவைகள் செய்து வருவதாக அப்பகுதியினர் கூறிவருகின்றன. மேலும் பகுதியில் உள்ள மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தீர்த்து வைப்பார் என்றும்,

பார்த்திபன் மன்னிவாக்கம் 10-ஆவது வார்டு திமுக கிளை கழக செயலாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பார்த்திபன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். விற்பனை செய்யப்பட்ட அதே வீட்டு மனையை வேறொருவருக்கும் ஏமாற்றி விற்று விடுவதாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இவருக்கு ஏதேனும் குற்றச்செயல்கள் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஊரப்பாக்கம் அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .

Views: - 1

0

0