தருமபுரி: தருமபுரி மாவட்ட சுற்று சூழல் அணி சார்பில் உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப்பைகளை தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி வழங்கினார்.
நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கிற உயரிய நோக்கத்தில் கடந்த மாதம் சென்னையில் பொதுமக்களிடையே மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் பொது மக்களிடையே மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டுவரும் வகையில் தருமபுரி மாவட்ட சுற்றுசூழல் அணி சார்பில் தருமபுரியில் உள்ள உழவர் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சபைகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்ரமணி வழங்கினார். இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர் அன்பழகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாட்டான்மாது, சந்திரமோகன், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் குமார், காசிநாதன், ரஹீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0
0