ஈரோட்டில் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம்

1 November 2020, 10:30 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் 436 இடங்களில் காணொலி காட்சி மூலம் ஐம்பதாயிரம் பேர் கலந்து கொள்ளும் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ஈரோடு மாநகரில் அறுபது வார்டுகளிலும் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, ஊத்துகுளி, சென்னிமலை ஒன்றியங்கள் உள்ளிட்ட 205 இடங்களில் அவரவர் வசிக்கும் ஊரிலேயே காணொலி காட்சி மூலம் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதே போல வடக்கு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, கோபி, நம்பியூர், டி.என்பாளையம், சத்தி, தாளவாடி, ஒன்றியங்கள் மற்றும் கோபி, சத்தி, பவானி, புன்செய் புளியம்பட்டி, ஆகிய நகர பகுதிகளிலும் சேர்த்து ஒன்றியம் மற்றும் நம்பியூர் பகுதிகளில் 140 இடங்களில் காணொலி காட்சி வாயிலாகவும்,

ஈரோடு வடக்கு தெற்கு மாவட்டங்கள் இணைந்து ஈரோடு அருகே பெருமாள் மலையில் பிளாட்டினம் மஹாலில் சிறப்பு பொதுக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதில் 135 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், திமுக துணை பொது செயலாளர்கள் சுப்புலட்சுமி, ஜெகதீசன், அந்தியூர் செல்வராசு உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், மாவட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 19

0

0