துப்புரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

9 November 2020, 5:33 pm
Quick Share

விருதுநகர்: கொரோனா காலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் 1,200 பேருக்கு சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று காலத்தில் களப்பணி ஆற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் மற்றும் இராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் இராஜபாளையம் தாலுகா பகுதியில் உள்ள 1200 துப்புரவு பணியாளர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாலை , சால்வை , அணிவித்து புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்குவதில் பெருமை அடைவதாகவும், இவர்கள் களப்பணிகள் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது அனைவரும் வீட்டில் முடங்கி இருந்த காலத்தில் இவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றியதால் பெரும் பாதிப்பு குறைக்கப்பட்டது. ஆகையால் இவர்களை கௌரவிப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

Views: - 65

0

0