கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக பிரமுகர் கைது: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

Author: Udhayakumar Raman
15 September 2021, 6:54 pm
Quick Share

விருதுநகர்: காரியாபட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பாண்டியன்நகர் பகுதியில் பள்ளி, கல்லூரி கமாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரியாபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை நடத்திய காரியாபட்டி காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு காரில் இருந்த திமுகவைச் சார்ந்த சாமிக்கண்ணு (72) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் சாமிக்கண்ணு அப்பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதை அடுத்து அவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது காரில் இருந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே சாமிகண்ணு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது 8 கிலோ கஞ்சாவுடன் காரியாபட்டி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த வழக்கில் அவர் ஒரு சில தினங்களிலேயே ஜாமினில் வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து எந்தவித அச்சமுமின்றி கஞ்சா விற்பனையில் ஈடுபடும் இதுபோன்ற நபர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கையான குண்டர் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 160

0

0