தியாகி இம்மானுவேல் சேகரின் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

11 September 2020, 3:14 pm
Quick Share

திருச்சி: தியாகி இம்மானுவேல் சேகரின் 63ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரின் 63ஆவது நினைவு நாளை முன்னிட்டு திமுக கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன்,

துறையூர் ஸ்டாலின் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி , இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன், சேர்மன் துரைராஜ்,வழக்கறிஞர் பாஸ்கர் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் மன்ற தலைவர் பொன் முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Views: - 5

0

0