உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் திமுக நாடகம்: அதிமுக குற்றச்சாட்டு

Author: Udhayakumar Raman
20 October 2021, 8:31 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் திமுக நாடகம் நடத்தி வருவதாகவும், புதுச்சேரியில் அமலில் உள்ள தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் திரும்ப பெற விட்டால் மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி புதுச்சேரி திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஆளாக்கூடிய திமுக அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என்பதற்காவே திமுக வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றம்சாட்டினார் .

மேலும் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் பணிகளை நிறுத்த நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை திரும்ப பெற்றிருக்க வேண்டும். தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இன்னும் ஒரிரு தினங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் விளக்கி கொள்ளவிட்டால் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Views: - 150

0

0